நோன்பு கஞ்சி வாடாவும்
டிசம்பர் : 27.19
அதிராம்பட்டினத்தில் எழில்மிகு வல்ல இறைவனின் இல்லம்
செக்கடி பள்ளியும்,
நடை பயிற்சிக்காக (walkway)நடைமேடை அமைக்கப்பட்ட இடமும்,
குளத்தை சுற்றி செடிகளும் பூஞ்சோலையாக அமைந்துள்ளது செக்கடிகுளம் .
இரு கரைகளிலும் வானுயர்ந்து நிற்கும் இரு பள்ளிகளின் மினாராக்கள்.
நமது ஊருக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் செக்கடி குளத்தில்
இன்று காலை எட்டு மணி அளவில்
குளத்தில் குளிப்பதற்காக அதிரைக்கு மகுடமாக திகழும் நோன்புக்கஞ்சியும், நாவுக்கு ருசியான வாடா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
MSM Yousef kaka வீட்டு சுவையான வாடா மிக அருமையாக இருந்தது.
அதனை சாப்பிட்டவர்களுக்கு தான் அதன் ருசி தெரியும்.
அத்துடன் பருப்பு வடை , சமோசா என்று வரிசையாக வலம் வந்தது .
குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது.
மாஷா அல்லாஹ்!
முன்கூட்டியே குளத்தில் குளிப்பதற்காக ஆர்வமாக அதிகமானோர் திரண்டு இருந்தார்கள்.
பெரியவர்கள் முதல் இளைஞர்கள் , சிறியவர்கள் வரை அனைவரும் ஆர்வமாக கலந்து கொண்டது
குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இருந்து , வெளி ஊரில் இருந்தும், லீவில் ஊர் வந்தவர்களும் , கல்யாணத்திற்கு கலந்து கொள்வதற்காக முக்கியமாக வந்தவர்களும் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பம்சம்.
எந்த ஒரு வேலை செய்தாலும் அது சம்பந்தப்பட்ட உடம்பில் சில உறுப்புகளை மட்டும் தான் வேலை செய்யும்.
அதேசமயம் நாம் குளத்தில் குளிக்கும் பொழுது நீச்சல் செய்வதன்மூலம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் வேலை செய்கின்றன.
அதன் காரணமாக உடல் ஆரோக்கியம் பெறுகின்றது.
ஆரம்பத்தில் குளத்தில் தண்ணீர் இருக்கும் போதெல்லாம் அனைவர்களும் நீண்டநேரம் இந்தக் கரையில் இருந்து அந்த கரைக்கும் வந்து போவார்கள்.
மணிக்கணக்காக நீச்சல் செய்து அனைவரும் ஆரோக்கியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிலிதட்டு மற்றும் இன்னும் பிற விளையாட்டுகள் முன்பெல்லாம் விளையாடும் பொழுது ,
நோய்கள் இல்லா நல்ல ஆரோக்கியம் இருந்தது.
ஆனால் காலங்கள் செல்ல செல்ல ஆரோக்கியம் இல்லா நோய்கள் வலம் வருவதை காணலாம்.
முக்கிய காரணம்
வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதின் காரணத்தினால் ,
சொல்லுக்கு முக்கியம் இல்லை
ஆனால் செல்லுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது ,
உடற்பயிற்சி இல்லை நடைபயிற்சி இல்லை குளத்தில் நீச்சல் இல்லை , விளையாட்டுக்களும் குறைவு
அனைவரும் அறிந்ததே.
நாம் ஆரோக்கியமாக வாழ
தினமும் நடை பயிற்சி செய்வோம.
அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்காக ,
நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான்
இந்த நடைமேடை.
பெண்களுக்கு நேரம்
காலை 5 மணி முதல்
காலை 7 மணி வரையிலும்.
ஆண்களுக்கு நேரம்
காலை 7 மணி முதல்
காலை 9 மணி வரையும்
(Walkway) நடை மேடை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அத்துடன் மிதிவண்டிகள் சைக்கிளில் வலம் வருவதற்கு நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் அந்த நீச்சல் செய்யக் கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தற்பொழுது
நமது ஊரில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியிருக்கின்றன .
ஊரில் இருந்தவர்கள் குளத்தில் குளிப்பதற்கு அதிகம் நீச்சல் செய்வதற்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அதேநேரத்தில் சிறுபிள்ளைகளை குளத்தில் குளிப்பதற்கு மிக கவனமாக பெற்றோர்கள் உடன் இருக்கவேண்டும்.
நீச்சல் அடிப்பதற்கும் அதனைக் கற்றுக் கொடுப்பதற்கும் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் முன் வரவேண்டும்.
இந்த நிகழ்வில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் நோன்பு கஞ்சியும் வாடவும் கொடுத்து உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
செக்கடிமேடு நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
மேலும் சில தகவல்கள்!!
நூற்றாண்டு விழாவை விரைவில் கொண்டாடும் நமது சங்கமும்,
பொன்விழா ஆண்டை எதிர்நோக்கி இருக்கும் பள்ளியும்,
30 வருடங்களையும் கடந்து கம்பீரமாக நிற்கும் மரமும்,
இன்னும் பிற வரலாற்றில் ஒரு ஏடு ஆக திகழும் நமது
சம்ஷுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா என்பது கூடுதல் சிறப்பம்சம்.
0 Comments