இன்று ஆட்டம் தடைப்பட்டால், ரிசர்வ் டே போட்டி எவ்வாறு நடக்கும்?? முழு விவரம்!!



இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டி முழுமையாக பாதிக்கப்பட்டால், ரிசர்வ் நாளில் நடக்கும் போட்டி எவ்வாறு நடக்கும். விதிமுறைகள் இதோ.
நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸ் ஒரு கண்ணோட்டம்
புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்குமான அரையிறுதி போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்டில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் இந்திய பந்துவீச்சை அடிக்க முடியாமல் திணறினர்.

பும்ரா மற்றும் புவனேஸ்வர் இருவரும் வீசிய முதல் ஓவர்கள் இரண்டும் மெய்டன் ஆகியது. நியூசிலாந்து அணிக்கு முதல் ரன் 2.5 வது ஓவரில் வந்தது. தொடர்ந்து தடுமாறிய கப்டில் 14 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து பும்ரா பந்தில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் நிக்கோல்ஸ் உடன் சற்று நிலைத்து ஆடி அணிக்கு ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. சூழல் பந்துவீச்சுக்கு இரண்டு பேட்ஸ்மேன்களும் தடுமாறிய நிலையில், சஹால் மற்றும் ஜடேஜா இருவருக்கும் தொடர்ந்து ஓவர்கள் கொடுக்கப்பட்டு வந்தது.

ஜடேஜா வீசிய 19வது ஓவரில் நிக்கோல்ஸ் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். இவர் 51 பந்துகளில் 28 ரன்கள் அடித்திருந்தார். அடுத்ததாக சஹால் பந்தில் கேப்டன் வில்லியம்சன் 67 ரன்களுக்கு வெளியேறினார். நீசம் 12 ரன்களுக்கும் காலின் 16 ரன்களுக்கும் வெளியேறினார்.
46.1 ஓவர்களில் 211/5 என ஆடிவருகிறது. இதற்கிடையில் மழை குறுக்கீட்டால் ஆட்டம் தடைபட்டது. தற்போது களத்தில் ராஸ் டைலர் 67 ரன்களிலும் டாம் லேதம் 3 ரன்களிலும் உள்ளனர்.

போட்டி நடைபெறும் நாளன்று, மழையால் போட்டி முழுவதுமோ அல்லது பகுதி ஆட்டமோ பாதிக்கப்பட்டால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, போட்டியின் ஓவர்கள் மீதமிருக்கும் நேரத்திற்கு ஏற்ப குறிக்கப்பட்டு, இலக்கும் அதேகேற்றாற்போல மாற்றப்படும். குறைந்தபட்சம் இரு தரப்பும் தலா 20 ஓவர்கள் ஆட வேண்டும். ஆட்டத்தின் வழக்கமான நேரத்தில் இருந்து 120 நிமிடங்கள் வரை நீட்டிக்கொள்ளலாம்.

அப்படி 20 ஓவர்கள் கூட ஆட முடியவில்லை எனில், போட்டி முழுவதும் அல்லது மீதறமிருக்கும் போட்டி ரிசர்வ் டே அல்லது அடுத்த நாளுக்கு மாற்றப்படும்.
  1. ஆட்டம் வழக்கமாக எந்த நேரத்திற்கு துவங்குமோ அதே நேரத்தில் தான் ரிசர்வ் நாளன்றும் துவங்கும். அதாவது இந்திய நேரப்படி பகல் 3.00 மணியளவில்.
  2. முந்தைய தினம் எதோடு விடப்பட்டது அங்கிருந்தே துவங்கும். உதாரணமாக, இன்று ஆட்டம் 46.1 ஓவர்களில் தடைபட்டது. நாளை 46.2வது ஓவரில் இருந்து வீசப்படும். இன்று ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் தடைபட்டிருந்தால், நாளை முதல் பந்தில் இருந்து வீசப்பட்டிருக்கும்.
ஐசிசி தொடர்களில், ரிசர்வ் டே காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கே கொடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments