மழை குறுக்கீடு காரணமாக அரையிறுதி போட்டியில் தடங்கல். மழை தொடர்ந்து நீடித்தால் என்னென்ன முடிவுகள் எடுக்கப்படும் என ஐசிசி விதிமுறைகள் அடிப்படையில் பிசிசிஐதெரிவித்துள்ளது.
12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்குமான அரையிறுதி போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்டில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் இந்திய பந்துவீச்சை அடிக்க முடியாமல் திணறினர்
தொடர்ந்து தடுமாறிய கப்டில் 14 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து பும்ரா பந்தில் வெளியேறினார்
அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் நிக்கோல்ஸ் உடன் சற்று நிலைத்து ஆடி அணிக்கு ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. சூழல் பந்துவீச்சுக்கு இரண்டு பேட்ஸ்மேன்களும் தடுமாறிய நிலையில், சஹால் மற்றும் ஜடேஜா இருவருக்கும் தொடர்ந்து ஓவர்கள் கொடுக்கப்பட்டு வந்தது.
ஜடேஜா வீசிய 19வது ஓவரில் நிக்கோல்ஸ் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். இவர் 51 பந்துகளில் 28 ரன்கள் அடித்திருந்தார். அடுத்ததாக சஹால் பந்தில் கேப்டன் வில்லியம்சன் 67 ரன்களுக்கு வெளியேறினார். நீசம் 12 ரன்களுக்கும் காலின் 16 ரன்களுக்கும் வெளியேறினார்.
46.1 ஓவர்களில் 211/5 என ஆடிவருகிறது. இதற்கிடையில் மழை குறுக்கீட்டால் ஆட்டம் தடைபட்டது.
மழை காரணமாக இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம் தடைபட்டுள்ளது. அரையிறுதி போட்டி என்பதால் ரிசர்வ் டே என்கிற விதிமுறை இருந்தாலும், ரசிகர்கள் மற்றும் இன்னும் சிலவற்றை கருத்தில் கொண்டு, போதுமானவரை இன்றே போட்டியை முடிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மழை நின்றுவிட்டால், இரு காரணிகள் அடிப்படையில் போட்டி தொடரும்
0 Comments