வாட்ஸ் அப் எண் மாற்றத்தை நண்பர்கள் மற்றும் குரூப்களுக்கு அறிவிப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் எண்ணை மாற்றும்போது, செல்பேசியில் வாட்ஸ் அப் செட்டிங்குக்கும் ((WhatsApp Setting)) பின்னர் அக்கவுண்ட்டுக்கும் ((Account)) சென்று அதில் உள்ள சேஞ்ச் நம்பர் ((Change number)) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
அதனைத் தொடர்ந்து நெக்ஸ்ட் ((next)) என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அடுத்து வரும் பக்கத்தில் பழைய எண்ணையும், புதிய எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். அடுத்து, நெக்ஸ்ட் ((next)) ஆப்ஷனில் காண்டாக்ட்சை தேர்வு செய்து அனைவருக்குமோ அல்லது குறிப்பிட்டவர்களுக்கோ எண்மாற்றத்தை அறிவிக்கலாம். ஆண்ட்ராய்ட் பீட்டா போன்களில் தற்போது அமலாகியுள்ள இந்த வசதி, ஐ ஃபோன் மற்றும் விண்டோஸ் வகை போன்களில் விரைவில் அறிமுகமாகிறது.
0 Comments