பந்து கழுத்தைத் தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!



பந்து கழுத்தைத் தாக்கியதில் இளம் வீரர் கிரிக்கெட் வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கிர் அகமது வார் (18). இவர், அரசு சார்பில் அங்கு நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்கேற்றார்.

அப்போது அவர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வேகமாக வந்த பந்து அவர் கழுத்தில் தாக்கியது.

அடுத்த நொடியே கீழே விழுந்தார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

ஷார்ட் பிட்ச் பந்தை வார், அடிக்க முயன்ற போது மிஸ்சாகி, கழுத்தைத் தாக்கியது. உடனே சுயநினைவின்றி மயங்கி விழுந்துவிட்டார். ஹெல்மெட் அணிந்திருந்தும் பந்து தாக்கியிருக்கிறது. இதனால் அவர் உயிரிழந்தார்'' என்று மருத்துவர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வார், 11 ஆம் வகுப்பு படித்துவந்o:தார்.

Post a Comment

0 Comments