நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கையாளும் புதிய யுத்தி!!


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கடும் முயற்சி எடுத்துவருகிறது. நேற்று ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், அங்கு அதிகளவில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரும் தங்களது கட்சிக்கொடிகளுடன் திரண்டனர். ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியை பாகிஸ்தானின் கொடி என்று பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினர். அக்கட்சியின், ஐடி பிரிவு தலைவரே இதனை ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில், காஷ்மீரில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி நாளிதழ்களில் விளம்பரம் செய்துள்ளது. அதில், பாஜகவின் வழக்கமான நிறமான காவி இடம்பெறவில்லை. மாறாக பச்சை நிற பின்னணியில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments