சென்னை: மத்திய பாஜக அரசு அறிவித்திருக்கும் 2020-ம் ஆண்டு தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பதிவேடு திட்டம் உள்நோக்கம் கொண்டது; அபாயகரமானது என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான 2010-ம் ஆண்டு வீடியோவை பாஜக வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வீடியோவில், நாட்டின் குடிமக்கள் தங்களை பதிவு செய்து கொள்வது குறித்துதான் விளக்கப்பட்டிருக்கிறது
மக்களின் குடியுரிமை தொடர்பாக எதுவும் சொல்லப்படவில்லை. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உதவியாகத்தான் 2010-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேடு கொண்டுவரப்பட்டது.
மக்களின் குடியுரிமை தொடர்பாக எதுவும் சொல்லப்படவில்லை. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உதவியாகத்தான் 2010-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேடு கொண்டுவரப்பட்டது.
0 Comments