தமிழகத்தில் நாளையும் , நாளைமறுநாளும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் , மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது . தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் அது உருவான பிறகு அடுத்த மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் , தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . பின்னர் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி , வரும் 11 ம் தேதியன்று தமிழக கடற்கரையை அடையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் , நாளை மறுநாளும் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . இந்தக் காலகட்டத்தில் வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 Comments