சென்னை: ஒரு முஸ்லிமாக குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. குறித்து அச்சம் இருப்பதாக தமிழக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை லோக்சபா, ராஜ்யசபாவில் அதிமுக ஆதரித்தது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு இச்சட்டத் திருத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பது அதிமுகவின் நிலைப்பாடு.
பல மாநில முதல்வர்களும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யை அமல்படுத்தமாட்டோம் என கூறி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அப்படியான ஒரு கருத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அமைச்சர் நிலோபர் கபீல், முஸ்லிம்களிடையே பேசும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. அதில், குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்தாது; இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என கூறியிருந்தார்.
0 Comments