ஐபில் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 24வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது
இதனையடுத்து பஞ்சாப் அணியில் துவக்க மட்டையாளர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில் மற்றும் லோகேஷ் ராகுல் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக ஆடினர்.
துவக்க வீரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 64 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 6 சிக்சரும் 6 பவுண்டரிகளும் அடித்து அதிரடியாக ஆடினார். பஞ்சாப் அணி
20 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.
20 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர்களான டீ காக், சிதேஸ் களமிறங்கினர். டீ காக் 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அஸ்வின் ஓவரில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிதேஸ் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஷமி ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார்.
மிகவும் மோசமான முறையில் ஆடிக்கொண்டிருந்த மும்பை அணி பொல்லார்ட் களமிறங்கியதும் வெற்றி பாதையை நோக்கி நகர்ந்தது. இறுதிவரை நின்று சிறப்பாக ஆடிய பொல்லார்ட் வெற்றி பெரும் தருவாயில் 31 பந்துகளில் 81 ரன்கள் அடித்து ராஜ்புட் ஓவரில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
0 Comments