மாணவிகள் ஹிஜாப் அணிய தடை-வெடித்தது மாணவிகளின் போராட்டம்.


கர்நாடகாவில் தற்போது இரண்டு கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என்று அவர்களை கல்லூரியிலிருந்து வெளியே அனுப்பியுள்ளது. இஸ்லாமிய மாணவிகள் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வருகிறார்கள். இதனையடுத்து அங்கே உள்ள இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எந்த ஒரு பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பொட்டு வைப்பது தொப்பி போடுவது ஹிஜாப் அணிவது போன்ற மத நம்பிக்கைக்கு ஏற்றவாறு செய்வார்கள். இதை எந்த ஒரு பள்ளி கல்லூரிகளும் தடைசெய்யவில்லை. ஆனால் கர்நாடகாவில் உள்ள இரண்டு கல்லூரிகள் ஹிஜாப் அணிவதை மட்டும் தடை செய்துள்ளார்கள். 

இதனையடுத்து கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. அவர்கள்,

"இஸ்லாமியர்களின் ஹிஜாபை அகற்ற 11 சொல்லும் கல்வி நிறுவனங்களுக்கு சீக்கியர்களின் தலைப்பாகையை கழட்ட சொல்ல துணிச்சல் உள்ளதா?
ஹிஜாப் தடை மாணவர்களின் உடையை சீர்படுத்துவதற்கு அல்ல. அதை காரணமாக சொல்லி, உங்களை என்றும் குறிவைப்போம் என இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட மக்களை பகிரங்கமாக அவர்கள் அச்சுறுத்துகின்றனர்."

பேரா.அருணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அவர்கள்

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் எனும் முக்காடு போட்டு கல்லூரி வரக்கூடாது என்று கர்நாடக பாஜக அரசு கூறுகிறது. கேட்டால் கல்வி நிறுவனத்தில் மத அடையாளம் கூடாது என்கிறது.

ஆனால் விபூதி, நாமம், சீக்கிய தலைப்பாகை அணிவதை தடுக்கவில்லை இதிலிருந்தே இது முஸ்லிம்கள் மீதான பாகுபாடு, வன்மம் என்பது உறுதி.

மெஹபூபா முஃப்தி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் அவர்கள்,

"இஸ்லாமியப் பெண்களின் கல்வி உரிமை மறுக்கப்படுவது காந்தியின் இந்தியாவை கோட்சேவின் இந்தியாவாக மாற்றுவதாகும்.

கர்நாடக கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை செய்வது இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்திலிருந்து ஓரங்கட்டுவதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சி"

முஸ்லிம் மாணவிகளுக்கு ராகுல் காந்தி ஆதரவு

"ஹிஜாபை கொண்டு மாணவிகளின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவின் மகளுடைய எதிர்காலத்தை சூறையாடுகிறோம்.

சரஸ்வதி அனைவருக்கும் அறிவை வழங்குகிறார். யாரையும் அவள் வேறுபடுத்தி பார்ப்பதில்லை"

மக்களவையில் குரல் எழுப்பிய திமுக எம்.பி. அவர்கள்,

காவித்துண்டு அணிந்து சென்ற மாணவர்கள் மிரட்டியதால் மறுநாள் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் கல்லூரியில் தடுக்கப்படுகின்றனர். கர்நாடக மாநிலம் குந்தப்புரா அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்ததற்காக மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - செந்தில்குமார் எம்.பி.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் கேள்வி

"கல்வியும், ஹிஜாபும் அடிப்படை உரிமை.

மாணவிகளை தடுப்பது எதை குறிக்கிறது?

தொடக்கத்தில் இருந்தே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகிறார்கள். அதுபோல் தொடக்கத்திலிருந்தே யாராவது காவித்துண்டு அணிந்து வந்திருக்கிறார்களா? அவர்களை அரசியல்வாதிகள் தூண்டி விடுகின்றனர். ஹிஜாபுக்கு அரசு தடை விதிக்காத நிலையில் அரசுக் கல்லூரி ஏன் தடை செய்கிறது?"

Post a Comment

0 Comments