பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசன்ஸ் கிடையாது தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழக போக்குவரத்துத்துறை திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும். மேலும் ஓட்டுனர் உரிமம் பெறவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மோட்டார் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது 15 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்போல் கார் ஓட்டுவதும் 2 சதவீதம் அதிகரித்து உள்ளது வாகனத்தை இயக்கும்போது போக்குவரத்து விதிமுறைகள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அறிவிப்பு
அதற்காக தான் ஓட்டுனர் உரிமை பெற பல்வேறு கட்டங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில பெற்றோர்கள் பொறுமையாக சிறுவர் மற்றும் சிறுமிகளிடம் வாகனத்தை கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டி செல்லுகிறார்கள் ஒரு வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து கொண்டு இதன் காரணமாக பின்னால் வரக் கூடியவர்கள் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். தற்பொழுது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க அதிக முயற்சிவம் தடைப்பட்டுள்ளது. 2019 சட்டப்பிரிவு 119 (ஏ)ன் பிடி உரிய ஓட்டுனர் பழகுநர் உரிமம் போராமல் மோட்டார் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் களுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் சிறார்கள் 12 மாதங்களுக்கு சாலையில் வாகனம் ஓட்டுவது ரத்து செய்யப்படும் வாகனத்தை ஓட்டிய சிறார்களின் 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமம் பேறு இல்லாத. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திலேயே அதிக அபராதம் சிறார் வாகனம் ஓட்டுவதற்குத் தான் எனவே பொறுமையாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் வாகனத்தை கொடுக்க வேண்டாம் இவ்வாறு அதிகாரிகள் கூறினர்
0 Comments