பிளாஸ்டிக் பைகளுடன் தெருக்களில் குப்பையை தீ வைத்த அவலம்..!

தேதி:21.10.21

இன்று காலையில் புதுமனை நான்காவது லைனில்

வீட்டில் உள்ள குப்பைகளை தெருக்களில் வைத்து தீ வைத்து உள்ளனர்.

இதில் அதிகமான பிளாஸ்டிக் பைகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது!

இதனால் அதன் அருகில் இருக்கும் நபர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதுடன் , ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதை மறந்து விடுகின்றனர்!

ஆகவே முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள்!

தினமும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடு தேடி , விசில் அடித்துக் கொண்டு குப்பைகளை சேகரிப்பதற்கு தினமும் வருகிறார்கள்.

அவர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்து

வீட்டையும் , அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!

பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் தீமைகளை விட்டு தவிர்த்துக் கொள்ளுங்கள்!

மேலும் துப்புரவு பணியாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பைகளை தெருக்களில் தீ வைத்து விடுவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அனைவரின் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்விற்கு சுத்தமாக வைத்துக் கொள்வோம்!

சுற்று சூழலை பாதுகாப்போம்!




Post a Comment

0 Comments