அதிராம்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தஞ்சாவூர் மண்டல கொரோனா தடுப்புக்குழு அலுவலர் எம்.எஸ் சண்முகம் இன்று புதன்கிழமை நேரடி சோதனை மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மண்டல கோரோனா தடுப்புக்குழு அலுவலர் எம்.எஸ் சண்முகம் தலைமையில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஏ.ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர், பட்டுக்கோட்டை டிஎஸ்பி சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை தாசில்தார் அருள் பிரகாசம் ஆகியோர் அடங்கிய குழுவினர், அதிராம்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பகுதிகளில் கைகழுவதற்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகள், அதிரை பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் தற்காலிக காய்கறி சந்தைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் ஆகியவற்றை நேரடி விசாரணை செய்தனர். மேலும், துப்புரவு பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் பணியைப் பாராட்டினர்.
அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், வட்டார மருத்துவ அலுவலர் ரஞ்சித், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை, சுகாதார ஆய்வாளர் முத்துசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

0 Comments