ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியீடு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பல நாட்கள் போராட்டம் நடந்து வந்தது. 



கடந்த 22ம் தேதி நடந்த 100வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 


தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்கும் மதிப்பளித்து , தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முடிவு செய்துள்ளது. 



ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்படுவதுடன், தண்ணீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments