அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிரை நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
நமதூர் நகராட்சி தேர்தலுக்காக வார்டுகள் மறுவரை செய்யப்பட்டதில் நமது பகுதியில் (ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவில்) பலவிதமான குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் சரி செய்து தரவில்லை.
இந்த நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட பகுதிகளில் அநீதமான முறையில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் நகராட்சி முன் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஈ.சி.ஆர். சாலை பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் இந்த போராட்டத்தில் 500 பேருக்கும் மேல் கலந்துகொண்டனர்.
0 Comments