ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 73 வது குடியரசு தின விழா!


ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்ற நமது நாட்டின் 73 வது குடியரசு தின விழா!

இன்று காலையில் 7:30 மணிக்கு ஹாபிழ் M.I. ஃபைஜுத்தீன் அவர்களின் கிராத்துடன் துவங்கிய நிகழ்வு!

சங்க தலைவர் ஹாஜி  MA. முகம்மது சாலிகு அவர்கள் நிகழ்வுக்கு தலைமை ஏற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.

சங்க செயலாளர் ஹாஜி AH. ஹாஜா ஷரீப் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

வரவேற்புரை MF.முகம்மது சலீம் அவர்கள்.

குறுகிய நாட்களில் முழு குர்ஆனையும் மனனம் செய்த ஹாபிழ் S.முகம்மது யூசுப் அவர்களுக்கு சாதனையாளராக கௌரவிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது!

மேலும் அவர்களின் இனிமையான குரலில் கிறாத் ஓதியது மிக சிறப்பு!

வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதையும் ,  முஸ்லிம்களின் தியாக வரலாறுகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதையும் , தற்பொழுது முஸ்லிம்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதையும் குறிப்பிட்டு சொன்ன விதம் அருமை!

சங்கத்தின் துணை செயலாளர் S.முகம்மது தமீம் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்.

நிகழ்வு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!






 



Post a Comment

0 Comments