அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகாமயில் ஆக்கிரமிப்பு நிலத்தில் தனியார் ஒருவர் கசாப் கடை நடத்தி வந்தார், நோய் பரவும் இக்காலத்தில் கூட ஏழை மாணாக்கர்களின் நலன் குறித்த அக்கரை இல்லையா என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இந்நிகழ்வு மாவட்ட ஆட்சியர் காதிற்கு சென்றவுடன் மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவிட்டு பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் இன்று காலை நேரடியாக அந்த இடத்திற்கு வந்து அந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள் அப்புறப்படுத்தி விட்டு சுத்தம் செய்து விட்டு சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துரிதமாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நேரில் வந்து பார்வையிட்ட பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் அவர்களுக்கும் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தனர் பொதுமக்கள்..
0 Comments