மழை ஓய்ந்தும் நீர் வடியாத அதிசயம் !!
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுமார் 1500/ஏழை.மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளிக்கூடத்தை ஒட்டி கழிவு நீர் கால்வாய் ஒன்று செல்கிறது.
இந்த கால்வாயில் மண் நிரம்பி உள்ளதால் மழை பெய்தால் கழிவு நீருடன் மழை நீரும் சங்கமித்து பள்ளிக்கூடத்தை ஆக்கிரமம் செய்து கொள்கிறது.
கடந்த இரண்டு நாட்கள் முன்னர் பெய்த கனமழையால் அதிரை நகரமே மிதந்தது ஆனால் மாவட்ட ஆட்சியர் முதல் கீழ் அதிகாரிகள் வரை பம்பரமாக சுழன்று நீரை வெளியேற்ற பாடுபட்டனர்.
ஆனால் இந்த பாவப்பட்ட ஏழை மக்களின் கல்வி நிலையம் மட்டும் அவர்களின் கண்களுக்கும் புலப்படவில்லை போல.
சுமார் 1500 மாணாக்கர்கள் பயிலும் பள்ளியை கண்டு கொள்ளாமல் நீரும் வடியாமல் இருப்பது ஏன்?
இந்த செய்தியின் எதிரொலியாக இன்று அதிரை பேரூராட்சியில் இருந்து ஊழியர்கள் வருகை தந்து உடனடியாக பள்ளியை சுற்றி இருந்த நீரை வெளியேற்றிவிட்டு தூய்மை படுத்தி உள்ளார்கள். தூய்மை படுத்திய அதிரை பேரூராட்சி மற்றும் அதன் ஊழியர்களுக்கு அதிரை இளைஞர் சார்பாக நன்றினை தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments