மழை ஓய்ந்தும் நீர் வடியாத அதிசயம் !!
அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுமார் 1500/ஏழை.மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளிக்கூடத்தை ஒட்டி கழிவு நீர் கால்வாய் ஒன்று செல்கிறது.
இந்த கால்வாயில் மண் நிரம்பி உள்ளதால் மழை பெய்தால் கழிவு நீருடன் மழை நீரும் சங்கமித்து பள்ளிக்கூடத்தை ஆக்கிரமம் செய்து கொள்கிறது.
கடந்த இரண்டு நாட்களும்மு முன்னர் பெய்த கனமழையால் அதிரை நகரமே மிதந்தது ஆனால் மாவட்ட ஆட்சியர் முதல் கீழ் அதிகாரிகள் வரை பம்பரமாக சுழன்று நீரை வெளியேற்ற பாடுபட்டனர்.
ஆனால் இந்த பாவப்பட்ட ஏழை மக்களின் கல்வி நிலையம் மட்டும் அவர்களின் கண்களுக்கும் புலப்படவில்லை போல.
சுமார் 1500 மாணாக்கர்கள் பயிலும் பள்ளியை கண்டு கொள்ளாமல் நீரும் வடியாமல் இருப்பது ஏன்? எதனால் என அப்பகுதி மக்கள் வினா எழுப்பாமல் இல்லை.
இது ஒருபுறம் இருக்க நாளை மறுநாள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுக்கையிட போவதாக பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தெரிவிக்கிறனர்.
மேலும் பள்ளிக்கு அருகாமயில் ஆக்கிரமிப்பு நிலத்தில் தனியார் ஒருவர் கசாப் கடை நடத்தி வருகிறார் என்றும், இவர் ஆளும் கட்சி என்பதால் ஆட்சியாளரே இவர் கடையை பற்றி கண்டுகொள்வது இல்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நோய் பரவும் இக்காலத்தில் கூட ஏழை மாணாக்கர்களின் நலன் குறித்த அக்கரை இல்லாத ஆட்சியர்களை என்னவென்று சொல்வது ?
0 Comments