நமதூர் அதிராம்பட்டினம் புது ஆலடித்தெரு ஆலடிக் குளம் பகுதியிலும் மற்றும் சி.எம்.பி லைன் பகுதியிலும் பல நாட்களாக குப்பைக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்து வந்த நிலையில் அக் குப்பைக் கழிவினை அகற்றுவதற்கான முயற்சிகளை பல நாட்களாக அதிரை இளைஞர் ஊடகம் வாயிலாக பொதுமக்களின் கோரிக்கை வைக்கப்பட்டது, மற்றும் கடிதம் வாயிலாகவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பல நாட்கள் கழித்து பேரூராட்சி அதிரை மக்களின் கோரிக்கையை ஏற்று புது ஆலடித் தெரு ஆலடி குளம் பகுதி மற்றும் சி.எம்.பி லைன் பகுதியில் உள்ள குப்பைகளை தூய்மை படுத்தி தந்த பேரூராட்சிக்கு அதிரை மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பேரூராட்சிக்கு ஒரு வேண்டுகோள்:
பேரூராட்சி மக்களின் கோரிக்கையில் நடவடிக்கை எடுப்பதில் சற்று தாமதப்படுத்துவது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது.
ஆகவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிரை மக்களின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments