அதிரைக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியரிடம் சங்கம் மற்றும் அதிரை இளைஞர் சார்பாக மனு வழங்கல்.!

நமதூர் அதிராம்பட்டினத்தை ஆய்வு செய்வதற்காக இன்று மதியம் 2 30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வந்திருந்த நிலையில் 
இரண்டு தரப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இரண்டு மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
>அதிரை இளைஞரின் சார்பாக மனு ஒன்று கொடுக்கப்பட்டது அம்மனுவில் வண்டிப் பேட்டையிலிருந்து தொக்காலிக்காடு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதை புகைப்படத்துடன் குறிப்பிட்டு அதனை விரைந்து சீர்ப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க கோரி அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
>இரண்டாவது மனு வானது சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவாகும். 
சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது நமது ஊரில் உள்ள  குளங்கள் அனைத்திலும் நீர் நிரம்பி ஓட வழியில்லாமல் இருப்பதையும் மற்றும் நமது ஊரில் வெறிநாய் தொல்லை அதிகமாக இருப்பதையும் குறிப்பிட்டிருந்தார்கள். இம் மனுக்கள் இரண்டையும் மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு இந்த இரண்டு மனுவின் கோரிக்கைகளையும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு சென்றார்.
இந்நிகழ்ச்சியில் நமது ஊர் பொதுமக்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.







Post a Comment

0 Comments