தரம் உயர்த்தப்பட்ட புதிய மின்மாற்றி..!

தேதி: 01.11.21

புதுமனை தெரு இரண்டாவது லைனில் அடிக்கடி மின் பழுது ஏற்பட்டதை மின்சார வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டதை அடுத்து..

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அருகில் உள்ள மின்மாற்றி.

அதை தரம் உயர்த்துவதற்கு அதற்கான பணிகள்  துரிதமாக வேலை நடைபெற்று வந்தது.

புதிய மின்மாற்றி மாற்றம் செய்து 100KV தரம் உயர்த்தப்பட்டு புதிய மின்மாற்றி மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது!

இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி!

இன்று மதியம் துவக்க நிகழ்வில்...

பட்டுக்கோட்டை மின்சார வாரியம் மணிமாறன் D.E அவர்களும் , அதிரை மின்சார வாரியம் சர்மா A.D அவர்களும்,

திமுக நகர செயலாளர் இராம குணசேகரன் அவர்களும் அத்துடன்

சமூக ஆர்வலர்கள் மற்றும் மஹல்லா வாசிகள் கலந்து கொண்டது மிக சிறப்பு!

மின் பழுது இல்லாத சீரான மின்சாரம் அந்த பகுதிகளுக்கு கிடைக்கும்!

செக்கடிமேடு மின்மாற்றி..யில் இருந்து இரண்டாவது லைன் விடை பெற்றது குறிப்பிடத்தக்கது!

இதற்காக துரிதமாக நடவடிக்கை எடுத்த மின்சார வாரியம் மற்றும் முயற்சிகள் செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: இந்த மின்மாற்றி க்கு உட்பட்ட பகுதிகள். 

புதுமனை தெரு இரண்டாவது லைன் முழுவதும் , 

செக்கடி பள்ளியில் இருந்து  முன்னாள் சங்க தலைவர் ஹசன் ஹாஜியார் அவர்களின் வீடு வரையிலும், அதேபோல் பெண்கள் மதரஸா எதிர்ப்புறம் உள்ள ரோட்டில் இருந்து மர்ஹீம் பாட்சா மரைக்காயர் வீடு வரை.

அதன் பகுதியாகும் என்பதை அந்த பகுதியில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது!



Post a Comment

0 Comments