அதிரை இளைஞர் இணையத்தளத்தில் நடத்தப்பட்ட கேள்விக்கு உண்டான பதில்கள்...
முதல் வாரத்திற்கான கேள்விகள் மற்றும் பதில்கள்.
1)குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் எத்தனை நன்மைகள் கிடைக்கும்?
ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் கிடைக்கும்
2)குர்ஆனை சிரமத்துடன் திக்கித் திக்கி ஓதுபவருக்கு எத்தனை கூலிகள் உண்டு?
இரண்டு கூலிகள் உண்டு
3)மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி எது?
தொழுகையை பற்றி
4)நயவஞ்சகர்களுக்கு மிகவும் கடுமையாகத் தோன்றும் இரண்டு தொழுகைகள் எது?
சுப்ஹு மற்றும் அஸர் தொழுகை
&
சுப்ஹு மற்றும் இஷா தொழுகை
5)வஹீ வரும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வயது என்ன?
40
6)கைக்குழந்தையாக இருக்கும்போது பேசிய நபி யார்?
ஈஸா அலைஹிவஸல்லம்
7)அல்லாஹ்விடம் பேசிய நபி யார்?
மூஸா அலைஹிவஸல்லம்
8)அல்லாஹ்வின் நண்பர் என எந்த நபி அல்லாஹ் குறிப்பிடுகிறான்?
இப்ராஹீம் அலைஹிவஸல்லம்
9)மிகவும் அழகான நபி யார்?
யூசுப் அலைஹிவஸல்லம்
10)மீன் வயிற்றில் சிக்கிக்கொண்ட நபி யார்?
யூனுஸ் அலைஹிவஸல்லம்
இரண்டாம் வாரத்திற்கான கேள்விகள் மற்றும் பதில்கள்.
1)முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாருடைய வீட்டில் மரணம் அடைந்தார்கள்?
ஆயிஷா சித்திகா ரலியல்லாஹு அன்ஹா வீட்டில்
2)நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்?
ஆடு மேய்த்தார்கள்
3)இவர் என்னில் பாதி என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாரைப் பார்த்துக்கூறினார்கள்?
பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு
4)யாரைப் பார்த்து சைத்தான் விரண்டு ஓடுவான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்?
உமர் ரலியல்லாஹு அன்ஹு
5)நமது நபியவர்களுக்கு
பாலூட்டிய செவிலித்தாய் பெயர் என்ன?முழு பெயரை எழுதவும்.
ஹலிமா சாதியா ரலியல்லாஹு அன்ஹு
6)அல்லாஹ்வுடைய வாள் என்று யாரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்?
காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு
7)அதிகமான ஹதீஸ்களை நபி ஸல் அவர்களிடம் பெற்று அறிவித்த சஹாபி யார்?
அபூஹுரைரா ரலியல்லாஹுo அன்ஹு
8)மார்க்கத்தில் இது கூடும் என்று சொல்லப்பட்டு அல்லாஹ்விற்கு பிடிக்காத ஒரு விஷயம் என்ன?
தலாக்
9)மிகச் சிறந்த பெண்மணி என்று அல்லாஹ் குர்ஆனில் யாரை கூறுகிறான்?
மரியம் அலைஹி வஸல்லம்
10)நபி ஸல் அவர்கள் கலந்து கொண்ட போரின் எண்ணிக்கை?
19
மூன்றாம் வாரத்திற்கான கேள்விகள் மற்றும் பதில்கள்.
1) அல்லாஹ்வின் பெயரான 'அல் காப்பில்'அதற்கான தமிழ் அர்த்தம் என்ன? இது அல்லாஹ்வின் எத்துனாவதுபெயர் ஆகும்?
கைபற்றுபவன் 20
2)நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் நடத்திய முதல் போர் எது? அது எந்த மாதத்தில் நடந்தது?
பத்ருப் போர் / ரமலான் மாதம்
3)ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?
ஜின் இனம்
4)ஸமூது சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் சான்றாக அனுப்பப்பட்ட விலங்கு எது?
ஒட்டகம்
5)அல்லாஹ்வின் பெயரான 'அல் கஹஹார்' அதற்கான தமிழ் அர்த்தம் என்ன? இது அல்லாஹ்வின்எத்துனாவது பெயர் ஆகும்?
அடக்கி ஆள்பவன் 15
6)கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உதாரணம் எப்படி கூறுகிறான்?
ஆடை
7)நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களின் சமுதாயம் எந்த பாவத்திற்காக அழிக்கப்பட்டது?
ஓரினச்சேர்க்கை
8)தொழுகையில் ருகூவையும் சஜிதாவையும் முழுமையாக செய்யாதவன் எப்படிப்பட்டவனவான்?
திருடன்
9)மறுமை நாளில் முஃமின்களுக்கு நிழலாக இருக்ககூடிய இரு சூராக்கள் என்ன?
சுரா அல்-பைக்காரா , சுரா ஆல இம்ரான்
10)அல்லாஹ்வின் பெயரான 'அல் முத்தாகபிர்' அதற்கான தமிழ் அர்த்தம் என்ன? இது அல்லாஹ்வின்எத்துனாவது பெயர் ஆகும்?
பெருமைக்குரியவன் 10
நான்காம் வாரத்திற்கான கேள்விகள் மற்றும் பதில்கள்.
1)இறுதி நபிக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஐந்து விசயங்கள் என்ன?
1.ஒரு மாத காலம் பயண தூரம் இடைவெளி யிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் என்னைக் குறித்த அச்சம் ஏற்படுவதன் மூலம் நான் உதவி செய்யப்பட்டிருக்கிறேன்.
2.பூமி முழுவதும் எனக்கு தொழுமிடமாகவும், சுத்தமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது.(எனவே என் உம்மத்தில் ஒரு மனிதன் தொழுகையை எங்கு பெற்றுக்கொண்டாலும் தொழுது கொள்ளட்டும்
3.எனக்கு போரில் கிடைக்கும் கனீமத்துகள் ஆகுமாக்கப்பட்டுள்ளது.
4.எல்லோருக்கும் சிபாரிசு செய்யும் பாக்கியம் எனக்கு மட்டுமே கொடுக்கப்பட்டள்ளது.
5.நான் எல்லா கூட்டத்தினருக்கமான நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்
2)பணு இஸ்ரவேலர்களில் இறுதியாக அனுப்பட்ட நபி யார்?
ஈஸா(அலை)
3)இறுதி நபித்துவத்தை உறுதிப்படுத்தும் குர்ஆன் வசனம் எது?
33:40 வசனம்.
4)இறுதி நபித்துவத்தை மறுக்கும் இரு கூட்டத்தார்கள் யார்?
காதியானிகள், ரஷாத் கலீபா (19) கூட்டத்தார்கள்.
5)குர்ஆனில் குறிப்பிடப்படும் இறுதி நாளுக்கான பெயர்கள் எத்தனை? அவை யாவை?
(அ) 25 (ஆ) 1.யவ்முல் ஆகிர் 2.காரிஆ
3.அத்தாமத்துல் குப்ரா 4.அஸ்ஸாகாஃ 5.ஆஜிவஃ 6.அல்ஹாக்கஹ் 7.அல்வாகிஆ 8.அஸ்ஸாஆ யவ்முல் ஆகிர் 10.யவ்முல் ஃபஸ்ல் 11.யவ்முத்தீய்ன் யவ்முல் ஹசராத் 13.யவ்முல் ஃகுரூஜ் 14.யவ்முல் ஃகுலூத் 15.யவ்முல் வயித் 16.ஃகாஷியஹ் 17.யவ்முல் ஜம்ஊ 18.யவ்முத்தாகாபுன் 19.யவ்முல் ஹிசாப் 20.யவ்முத்தனாத் 21.யவ்முத்தலாக் 22.யவ்முல் மவ்ஊத் 23.யவ்முல் மஷ்ஹூத் 24.யவ்முல் ஆசிர் 25.யவ்முல் அபூசுல் கம்தரீர்
6)நபியவர்களின் இறுதி இஃதிகாப் எத்தனை நாள்களாக இருந்தது?
இருபது நாட்கள்
7)(அஷரத்துல் முபஷரா) சுரக்கத்தைக் கொண்டு சுபச்செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்களில் இறுதியாக மரணம் அடைந்த நபி தோழர் யார்?
சஃது இப்னு அபீவக்காஸ்(ரலி)
8)நரகத்தின் காவலாளிகள் எத்தனைப் பேர் என குர்ஆன் குறிப்பிடுகிறது?
19 பேர் (74:30)
9)எந்த நபியின் நோன்பு அல்லாஹுக்கு பிரியமானது? அது எப்படிப்பட்ட நோன்பு?
(அ) தாவூத் (அலை)
(ஆ) ஒரு நாள் விட் ஒரு நாள் நோன்பு நோற்பது
10)எந்த சூராவின் ஒவ்வெரு வசனத்திலும் அல்லாஹ்வின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?
சூரத்துல் முஜாதலஹ்
ஐந்தாம் வாரத்திற்கான கேள்விகள் மற்றும் பதில்கள்.
1)மதீனாவில் ரசூல் (ஸல்) அவர்களால் நிறுவப்பட்ட மத்ரஸாவின் பெயரென்ன?
தாருல் குறா.
2)திண்ணைப் பள்ளியில் கற்றுக்கொடுக்கப்பட்ட முக்கிய பாடங்கள் யாவை?
1.குர்ஆன் வசனங்கள்.
2.நபிகளார் (ஸல்) அவர்களின் வழிமுறைகள்.
3.மருத்துவம், உடல்நலம், சுகாதாரம் முதலியன.
3)ரசூல் (ஸல்) அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் யாவை
குதிரையேற்றம், அம்பெறிதல், மல்யுத்தம், நீச்சல்.
4)ரசூல் (ஸல்) அவர்களால் நியமனஞ் செய்யப்பட்ட முதல் ஆய்வாளர் யார்?
ஹழ்ரத் முஆத்இப்னு ஜபல் (ரலி) அவர்கள்.
5)ஸய்யிதுஷ்ஷுஹதா (தியாகிகளின் தலைவர் என அழைக்கப்பட்டவர் யார்?
ஹழ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்கள்.
6)அஸ்ஹாபுல் முஅல்லக்காத் என கெளரவிக்கப்பட்ட கவிஞர் யார்?
லுபைத் இப்னு ராபீஆ அவர்கள்.
7)அரபியர்கள் எப்போது அரிசி உணவின் சுவையை அறிந்தனர்?
உபெல்லா எனப்படும் பாரசீக வளைகுடாவின் பலமான கோட்டையை வென்றபோது.
8)போரில் ஈடுபட முதன் முதலில் வாள் தயாரித்தவர் யார்?
ஜீபைர் இப்னு ஆவாம் அவர்கள்.
9)முதன் முதலில் தஜ்வீத் கலையை உருவாக்கியவர் யார்?
முஸைப் இப்னு உபைதுல்லாஹ் அவர்கள்.
10)குத்பாவை முதன் முதலில் ஓதியவர் யார்?
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.
ஆறாம் வாரத்திற்கான கேள்விகள் மற்றும் பதில்கள்.
1)முதன் முதலில் உலகின் முளைத்த மரம் எது ?
பேரீச்சம்பழ மரம்
2) இறைவன் இரண்டாவதாக எதனைப் படைத்தான்?
கருத்து வேறுபாடுகள் உள்ளனர், இதற்கு அனைவர்க்கும் மதிப்பெண் உண்டு.
3)முதன் முதலில் மஸாயில் என்னும் மார்க்க சட்டங்களை கோர்வை செய்தவர் யார்?
ஹழ்ரத் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள்
4)ஹழ்ரத் அலி (ரலி) அவர்களால் அகற்றப்பட்ட கஃபாவின் மாபெரும் சிலையின் பெயர் என்ன?
ஹீபல்
5)கஃபாவை இடிக்கயானைப்படையுடன் வந்த எமன் நாட்டு மன்னவன் யார்?
அப்ரஹா (த்துல் அஷ்ரம்)
6)அஸ்ஸாமு அலைக என்பதன் பொருள் என்ன?
உம்மீது மரணம் உண்டாவதாக என்பதாகும்
7)திருக்குர்ஆனில் எந்தக் கிழமையின் பெயரால் அத்தியாயம் உள்ளது?
வெள்ளிக்கிழமை.
8)உஹது சண்டையில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் எத்தனை பேர்?
700 பேர்
9)அல்லாஹ் வழியில் போராடுவதை விடச் சிறந்த அமல் எது?
அல்லாஹ்வை திக்ரு செய்தல்
10)ஆதம் நபி (அலை) அவர்களின் ஆதித்தொழிலென்ன?
விவசாயம்
ஏழாம் வாரத்திற்கான கேள்விகள் மற்றும் பதில்கள்.
1)மறுமை நாளில் இந்த பூமி எவ்வாறு இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும்.
2)நிலத்தில் ஒரு சாண் அளவுக்கு ஒருவன் அநீதம் செய்தால் மறுமையில் அவனுக்குரிய தண்டனை என்ன?
(மறுமையில் அதுபோன்ற) ஏழு நிலங்க ளை மாலையாக அவன் கழுத்தில் போடப்படும்.
3)மறுமை நாளில் எது பல இருள்களாக காட்சி தரும்?
அநீதி
4)ஸுர் ஊதப்படும் நாளில் குற்றவாளிகள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?
குற்றவாளிகள் நீல நிறக் கண்களுடையவர்களாக எழுப்பப்படுவார்கள்.
5)மரவேலை செய்யும் தச்சராக இருந்த நபி யார்?
ஜக்கரியா நபி அவர்கள்.
6)இந்தப் பெயர் இவருக்குமுன் உலகில் எவருக்கும் வைக்கப்படவில்லை. அந்த நபி யார்?
யஹ்யா நபி அவர்கள்.
7)அல்லாஹ்விடம் கோபித்துக் கொண்டு சென்ற நபி யார்?
யூனூஸ் நபி அவர்கள்
8)அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட சமுதாயம் எது?
யூனூஸ் நபி சமுதாயம்
9)எவற்றை இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சி என இறைவன் கூறுகிறான் ?
செல்வமும், பிள்ளைகளும்
10)எந்த போரின்போது ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதுாறு சம்பவம் நடந்தது?
பனூ முஸ்தலிக் (முரைசீஉ) போர்.
0 Comments