அதிரை மக்களின் நீண்டகால கனவான மினி சிங்கப்பூர் கனவு நீனவாகும் தரணைம் வெகு தூரம் இல்லை.!



அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் அதிரடி நடவடிக்கை.! 

 பணிக்கு வந்த நான்கு நாட்களில் பெரும் சவாலாக இருந்த சி.என்.பி லைன் குப்பைகளை அகற்றியுள்ளனர். சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் அதுபோல் பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளார். புதன்கிழமை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் பேரூராட்சி சென்று புதிய செயல் அலுவலரிடம் சி.எம்.பி லைன் குப்பைகள் மீது வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, உடனடி அன்று மாலை சி எம் பி பகுதி பார்வையிட்ட செயல் அலுவலர் அடுத்த நாள் சிஎம்பி லைன் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள குப்பைகளை அகற்றி உள்ளனர் மக்கள் புகாருக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக முக்கிய கோரிக்கையாக பேரூராட்சி ஊழியர்கள் தினமும் குப்பைகளை வீட்டில் வந்து வாங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது, அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட செயல் அலுவலர் வரும் நாட்கள் முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை அதிரையில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அவர்களே குப்பை பெற்று கொள்வார்கள் என்று செயல் அலுவலர் கூறியுள்ளார். செயல் அலுவலரின் முக்கிய கோரிக்கையாக மக்கள் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை தரம்பிரித்து (மக்கும் குப்பை, மக்கா குப்பை) என தரம் பிரித்து வைக்குமாறு கூறிஉள்ளார் .

செயல் அலுவலர் நியமிக்கும் முன்.!






செயல் அலுவலர் நியமிக்கும் பின்.!







Post a Comment

0 Comments