CMP லைனில் 2 வது நாளாக மரக் கழிவுகள் அகற்றம் தொடர்கிறது..! பிரமாண்டமாக காட்சி தரும் சிஎம்பி லைன்!!





CMP லைனில்

 2 வது நாளாக

மரக் கழிவுகள் அகற்றம் தொடர்கிறது..!



பிரமாண்டமாக காட்சி தரும் சிஎம்பி லைன்!!


நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் CMP லைனில் வாய்க்காலின் ஓரங்களில் உள்ள மரக் கழிவுகள் சுத்தம் செய்யும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.


அதன் தொடர்ச்சியாக இன்று காலை 8 மணி முதல் நிஜாம் மாவு மில் தொடங்கி கழிவுகளை சுத்தம் செய்து வருகிறது.


மிக சிறப்பான முறையில் பணிகளை துரிதமாக சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து 

நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது!


நேற்றும் இன்றும் இந்த பகுதியில் உள்ள பல வீடுகளில் களப் பணிகள் ஆற்றிய நண்பர்களுக்கு தேநீர் கொடுத்து நல்ல உபசரிப்பு செய்தது மிக சிறப்பு!

நாளையும் பணி தொடர்கிறது!


சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்!

சுற்று புரங்களை சுத்தமாக வைத்துக் கொள்வோம்!


தற்பொழுது தொக்காலி காட்டிலிருந்து CMP வாய்க்காலில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் இன்று இரவுக்குள் மரைக்கா குளத்திற்கு வந்து அடையும் அதன் பிறகு காட்டுக்குளம் அதற்குப் பிறகு செக்கடி குளம் என்று அனைத்து குளங்களுக்கும் இன்ஷா அல்லாஹ் விரைவில் தண்ணீர் நிரப்பப்பட்ட இருக்கின்றது என்பதையும் கூடுதல் தகவல்களாக தெரிவித்துக்கொள்கின்றோம்.


நமது சங்கம் நமது நலன்!

Post a Comment

0 Comments