CAA , NRC , NPR எதிராக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் பிரம்மாண்ட பேரணி!

 CAA , NRC , NPR எதிராக
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் பிரம்மாண்ட பேரணி!

பிப் : 22:2020

அதிராம்பட்டினத்தை அதிரவைத்த  எழுச்சிமிகு பேரணி!

இன்று மாலை சரியாக 5:10 மணிக்கு சங்க வளாகத்தில் இருந்து உலமாக்கள் மற்றும் ஆலிம்கள் தலைமையில் எழுச்சியுடன் மிக சிறப்பான முறையில் பேரணி துவங்கியது.

சங்க வளாகத்தில் அறிமுக உரை & துவா : முஹம்மது இப்ராஹிம் மௌலானா அவர்கள் உரையாற்றினார்கள்.
அத்துடன் துவா உடன் எழுச்சியுடன் பேரணி புறப்பட்டது.

புதுமனை தெரு , செக்கடி தெரு , சேர்மன்வாடி , பழைய போஸ்ட் ஆபிஸ் , கடைத்தெரு முக்கிய வீதிகள் வழியாக சென்று

 தொடர் போராட்டம் நடக்கக்கூடிய சாஹின் பாக் சென்றடைந்தது.

மாஷா அல்லாஹ்!

உலமாக்கள் மற்றும் ஆலிம்கள் தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது மிக சிறப்பு!

கோடை இடி போல  ஆர்ப்பரிக்கும் கோஷங்கள்.

கருப்புச் சட்டங்களுக்கு எதிராக மத்திய மாநில அரசுகளை கண்டித்து
விண்ணை முட்டிய கோஷங்கள்.

வீதிகள் வழியாக வந்து கொண்டிருக்கும் பொழுது 

பொது மக்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வமாக  இந்த பேரணியை வரவேற்றது குறிப்பிடத்தக்கது .

 உலமாக்கள் மற்றும் ஆலிம்கள் மற்றும் பெரியோர்கள், தன்னார்வ இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள், வயதில் மூத்தவர்கள் எல்லாம் கையில் தேசிய கொடியுடன் வீறுநடை யுடன் அணிவகுத்து சென்றது.

 இந்த பேரணி நிறைவடையும் வரையில் தொடர்ந்து நடைபயணமாக வந்தது   இந்த பேரணிக்கு கிடைத்த கூடுதல் சிறப்பம்சம்.

இறுதியாக தொடர் போராட்டம் நடக்க கூடிய சாஹின் பாக்கில்
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் முப்தி அஹ்மத்  மௌலானா அவர்கள் ஆற்றிய உரை அருமை.

நூறாண்டு விழா காணும் இந்த தருணத்தில் ஆலிம் கல் மற்றும் உலமாக்கல் தலைமையில் நடைபெற்ற பேரணி நமது சங்கத்திற்கு கிடைத்த மகுடம்!

இந்த எழுச்சியுடன் நடைபெற்ற பேரணியில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments