CAA , NPR , NRC எதிராக* *MSM நகர் மஹல்லா* *சார்பாக அதிர வைத்த


*CAA , NPR , NRC எதிராக*
*MSM நகர் மஹல்லா* *சார்பாக அதிர வைத்த*
*கண்டன பேரணி!*

பிப் : 23:2020

*5 வது நாளாக சாஹின் பாத்!*

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிரையில் தொடர் போராட்டம் சாகின் பாத்
ஐந்தாவது நாளாக இன்று எழுச்சியுடன் நடை பெற்று வருகிறது.

இன்று மாலை MSM நகரில் இருந்து பேரணியாக புறப்பட்டு
முக்கிய வீதிகள் வழியாக தொடர் போராட்டம் நடக்கக்கூடிய சாகிண் பாத் சென்றடைந்தது.

வீதிகளை அலறவைத்த  கோஷங்கள்.

அனைவரும் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு
கருப்பு சட்டத்திற்கு எதிராக வாசகங்கள் எழுதிய பாதைகளும்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீறுநடை போட்டு வந்தது.

ஆண்களும் பெண்களும் என்று பெரும் திரளாக அணிவகுத்து வந்தது மிக சிறப்புக்குரியது.

அதேபோல் ஒவ்வொரு நாளும் இந்த  தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு மஹல்லா ஜமாத்தார்கள் சார்பிலும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பிலும்,
கடற்கரைத்தெரு மஹல்லா சார்பிலும்,
அதற்கு முன்பாக
தரகர் தெரு மஹல்லா சார்பிலும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரமாண்ட கண்டன பேரணிகளை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய அமர்வில் இத்ரீஸ் மௌலானா அவர்கள்
இந்தத் தருணத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை மிக அருமையாக சிறப்புரையாற்றினார்கள்.

காணொலி காட்சி மூலம் இந்தக் கருப்புச் சட்டங்கள் மூலம் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை மிக அருமையாக விவரித்து சொன்ன விதம் கூடுதல் சிறப்பம்சம்!

சிறப்பு பேச்சாளர்களாக பேசியவர்கள் அனைவரும் இந்த கருப்பு சட்டங்களால் எத்தகைய பாதிப்புகள் உண்டாகும் என்பதையும் அதற்கு சான்றாக அசாமில் நடந்த வகைகளையும் குறிப்பிட்டு காட்டியது மிக அருமை.

 அவர்களுடைய ஆவேசமான கண்டன உரை அனல் பறக்க இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்து வருவதையும் சுற்றி காண்பித்து

வரலாற்று சுவடுகளை விளக்கிய விதம் அருமை!

பெரும் திரளாக அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு பேச்சாளர்கள் அனைவரும் கைதட்டகள் கொடுத்து உற்சாகமூட்டும் வகையில் இருந்தது இன்றைய நிகழ்வுகள்!!

Post a Comment

0 Comments