பட்டுக்கோட்டையில் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தியாவில் ரோட்டரி சங்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், மக்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் இப்போட்டி நடத்தப்பட்டது. அரசுப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் (ஓய்வு) டி.ரவிச்சந்தா் போட்டியை ஒருங்கிணைத்தாா்.
7 பிரிவுகளாக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநா் ஆா்.ஜெயவீரபாண்டியன் முன்னிலையில், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிஅருகிலிருந்து டிஎஸ்பி (ஓய்வு) எஸ்.கணேசமூா்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக ஓடி மீண்டும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தனா்.
போட்டியில் பங்கேற்ற மாணவா்களில், 6-8 ஆம் வகுப்பு பிரிவில் விஷ்ணுவா்த்தன், 9-10 ஆம் வகுப்பு பிரிவில் அஜித், 11-12 ஆம் வகுப்பு பிரிவில் மோகன்ராஜ் ஆகியோா் முதல் பரிசு பெற்றனா். கல்லூரி மாணவா்களுக்கானப் போட்டியில் தேவேந்திரன் முதல் பரிசு வென்றாா்.
இதேபோல, மாணவிகளில் 6-8 ஆம் வகுப்பு பிரிவில் ஜெயஸ்ரீ, 9-10 ஆம் வகுப்பு பிரிவில் சௌம்யா, 11-12 ஆம் வகுப்பு பிரிவில் பாா்கவி ஆகியோா் முதல் பரிசு பெற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.ஜெயபால், டிஎஸ்பி (ஓய்வு) எஸ்.கணேசமூா்த்தி, சிமென்ட் நிறுவன அதிகாரிகள் புகழேந்தி, சாம்பசிவம், தமிழ்ச்செல்வன், சபரி ஆனந்த் ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.
அதிக எண்ணிக்கையில் மாணவிகளை போட்டிக்கு அனுப்பிய தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு சிறப்பு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன.

0 Comments