சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியரிடம் ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக உள்ள விஜயகுமாரி என்பவர் சந்தேகத்திற்குரிய வகையில் பதட்டத்துடன் வெளியே சென்றுள்ளார்.

இதனை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அப்போது அவரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் கொண்ட தங்க கட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர். 

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments