கெஜ்ரிவால் அவர்களின் உருக்கமான உரை

 #கலங்கிய #கெஜ்ரிவால்..
"நான் இந்த 5 ஆண்டுகால ஆட்சியில்
மக்களுக்காக எவ்வளவோ செய்திருக்கிறேன்..

அத்தனை  எதிர்ப்புகளையும் மீறி லஞ்சம்
ஊழல் இல்லா ஆட்சியை தந்திருக்கிறேன்..

தனியாருக்கு நிகரான உயர்தர இலவச அரசு மருத்துவமனை,

தனியாருக்கு நிகரான உயர்தர அரசு பள்ளிகள்,

பெண்கள் பாதுகாப்புக்காக ஊரெங்கும் CCTV கேமராக்கள்,

மாநிலம் முழுவதும் இலவச wifi வசதி,

பெண்களுக்கு இலவச பேருந்து,

மாணவர்கள் மேற்படிப்பிற்கு எந்த சூரிட்டியும்
இல்லாமல் வட்டி இல்லா கடன்,

இலவச குடிநீர்,

இந்தியாவிலேயே மலிவு விலை மின்சாரம்,

வயதானொருக்கு இலவச ஆன்மீக பயணம்,

உங்களை அலைய வைக்காமல் உங்கள் வீடு
தேடி வரும் பிறப்பு சான்றிதழ்,   ஜாதி சான்றிதழ், திருமண பதிவு, போன்ற 100
அரசு சேவைகள்

இப்படி எங்கள் அரசுக்கு உட்பட்ட  அத்துணை துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி இருக்கோம்..

கடந்த 5 ஆண்டுகால என் ஆட்சியில்,
ஒரே ஒரு முறை கூட,  கரண்ட் கட்டனமோ,, பேருந்து கட்டனமோ, தனியார் கல்வி கட்டனமோ, உயர்த்தவில்லை,

எந்த வரியையும் கூட்டவில்லை, புதிதாக எந்த வரியையும் போடவில்லை,

இருந்தும் என் அரசு டெல்லியை இந்தியாவிலேயே  முதல் கடன் இல்லாத மாநிலமாக்கி உள்ளது..

டெல்லி பொருளாதாரத்தை கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளேன்..

எப்பொழுதும் மக்களை பற்றியும், அவர்களது முன்னேற்றத்தையும் மட்டுமே எண்ணி உழைத்து வருகிறேன்...

இவ்வளவு எல்லாம் செய்தும், என் சுயநலம் இல்லா வேலையின் பலலனை, அந்த பிஜேபி காரர்களும் சேர்ந்து அனுபவித்துக்கொண்டு,

இன்று என்னை #தீவிரவாதி #தீவிரவாதி_ என என் மீதுபழி சொல் பேசுகிறார்கள் அவர்கள்.."

என்று பேசிக்கொண்டிருக்கும்போதே...
#கண்கள் #கலங்கினார் #கெஜ்ரிவால்..

Post a Comment

0 Comments