அதிரையில் பிரமாண்டமாக நடைபெற்ற
இரண்டு நிகழ்வுகள்!!
ஜன :30:2020
CAA,NRC,NPR க்கு எதிராக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து எழுச்சியுடன் மிக சிறப்பாக நடைபெற்ற
இரண்டு நிகழ்வுகள்!
மாஷா அல்லாஹ்
அதிரையில் காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
அவை :
மனித சங்கிலி போராட்டம்.
இன்று மாலை 4:30 மணிக்கு மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அதிராம்பட்டினம் பஸ் நிலையம் அருகில் ECR ரோட்டில் ஆரம்பித்து தொடங்கிய மனித சங்கிலி தொடராக ரயில்வே கேட்டையும் தாண்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
இதில் பெருந்திரளாக ஆண்களும்,பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டது சிறப்பம்சம்.
பெண்கள் அதிகமாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ECR ரோடு முழுவதும் மனித கூட்டங்களாக காணப்பட்டது.
சரியாக மாலை 5:30 மணிக்கு மனித சங்கிலி மிக சிறப்பாக நிறைவு பெற்றது.
தமிழகம் முழுவதிலும்
மிக சிறப்பான முறையில் எழுச்சியுடன் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில்
அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டது சிறப்பம்சம்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------
அடுத்து
மாபெரும் பெண்கள் மாநாடு.
SDPI கட்சி சார்பில் மாபெரும் பெண்கள் மாநாடு
இன்று மாலை 5 மணி அளவில் தொடங்கி மிக சிறப்பாக எழுச்சியுடன் நடை பெற்றது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டன உரை
அதிர வைத்தது.
இடையிடையே கோஷங்கள் விண்ணை பிளந்தன.
பெருந்திரளாக பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு நிகழ்வுகளும் முதல்முறையாக நடைபெற்றவை.
அதிரை வரலாற்றில் ஓர் ஏடுகளாக பதிந்துவிட்டன.
அனைத்து இடங்களுக்கும் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிரையை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் அதிகமானவர்கள் பங்கு பெற்றார்கள்.
பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட மாநாடு.
மிகச்சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
SDPI கட்சியின் நிர்வாகிகள் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.
இரண்டு நிகழ்வுகளும் அதிரையை அதிர வைத்தது.
இந்தியா முழுவதும் , உலகம் முழுவதும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள்
நடைபெற்று வருவது குறப்பிடத்தக்கது.
இன்ஷா அல்லாஹ்
எல்லாம் வல்ல இறைவனின் உதவி கொண்டு இந்த சட்டத்தை பின்வாங்க வைப்பான்!.
அதிகமாக அனைவரும் துவா செய்வோம்!.
0 Comments