ரஜினி, கமலுக்கு கல்லூரிகளில் தடை

 

சென்னை : நடிகர் கமல், ரஜினி நிகழ்ச்சிகளின் எதிரொலியாக, கல்லுாரிகளில் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மக்கள் நீதி மையத்தின் தலைவர், நடிகர் கமல், பல்வேறு கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் விழாக்களில் பங்கேற்கிறார். இந்த விழாக்களில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அவர், மத்திய - மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல் கட்சிகளை விமர்சித்தும், பல்வேறு கருத்துகளை பரப்பி வருகிறார்.
அதேபோல், நடிகர் ரஜினியும், ஒரு பல்கலை விழாவில் பங்கேற்று, தான் துவங்க உள்ள அரசியல் கட்சி குறித்து பேசினார்.

இதுகுறித்து, ஆளுங்கட்சியினர் தரப்பில், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கல்லுாரிகளில் அரசியல் பேசும் நிகழ்ச்சிகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை சார்பில், கல்லுாரி கல்வி இயக்குனர் மஞ்சுளா, அனைத்து மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்லுாரிகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்போர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், தாங்கள் சார்ந்த அரசியல் கட்சியின் கொள்கைகளை, தங்கள் உரைகளில் பேசி வருகின்றனர். இத்தகைய நிகழ்வுகள், மாணவர்களின் கல்விக்கு.
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments