கரூர் மாவட்ட, கலெக்டர் அன்பழகனுக்கு கார் ஓட்டுனராக பணியாற்றியவர் பரமசிவம், 58; ஏப்., 30ல் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பாராட்டு விழா, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது. விழா முடிந்ததும், பரமசிவத்தையும், அவர் மனைவியையும் காரில் அமர வைத்து, கலெக்டர் அன்பழகன் ஓட்டிச் சென்றார்.
காந்தி கிராமத்தில் உள்ள ஓட்டுனர் வீட்டுக்குச் சென்று, அவர்களை இறக்கி விட்டார். மேலும், அவர் வீட்டில் தேனீர் அருந்தி, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
0 Comments