சூட்டை தணிக்க டார்ஜிலிங் செல்கிறார் ரஜினிகாந்த்

கடும் சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் ரஜினிகாந்த் இன்று இரவு மலைவாசஸ்தலமான டார்ஜிலிங்குக்கு ஓய்வு எடுக்க செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என போலீசுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சென்னையில் கடும் சினத்துடன் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் ஒருமையில் பேசியது அவரது இன்னொரு முகத்தையே காட்டியது.

ரஜினிகாந்துக்கு அரசியல் கட்சித் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது வீடு எந்த நேரத்திலும் முற்றுகையிடப்படலாம் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் மலைவாசஸ்தலமான டார்ஜிலிங் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று இரவு ரஜினிகாந்த் டார்ஜிலிங் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments