கறுப்பு பணம் ஒழிப்பு மற்றும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலமாக பினாமி சொத்து மற்றும் பரிவர்த்தனை குறித்து தகவல் கூறலாம். தகவல் தெரிவிப்பவர்கள் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பினாமி சொத்து குறித்து தகவல் தரலாம்.
வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் தந்தால் தரப்படும் சன்மானம் ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணம் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5 கோடி வரை சன்மானம் தரப்படும் தகவல் தருவோரின் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் எனக் கூறி உள்ளது.
0 Comments