இது பனி மூட்டமில்லை குப்பை மூட்டம்.


இது பனி மூட்டமில்லை,
விஷ முகை மூட்டம்.
நீங்கள் பார்ப்பது ஊட்டி, கொடைக்கானல் போன்ற பனி பிரதேசத்திலிருந்து ஆவியாகும் பனி மூட்டமில்லை.

ஏறிப்புறக் கறை பஞ்சாயத் சர்வே நம்பர் 251 பகுதில் ECR நெடுஞ்சாலை சிறிய ஏறிக்கு அருகாமையில் ரோட்டை ஒட்டி குப்பைகளை கொட்டி எறித்து விடப்படும் விஷ புகை.
அதிகமான பிளாஸ்டிக் எறிவதன் காரணமாக அதன் நச்சுத் தன்மை புகையை கக்குகிறது.
அப்பகுதி வழியாக வாக்கிங், மற்றும் வாகனத்தில் செல்லும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்ப்படுத்துகிறது.
மனிதர்களுக்கு மட்டும் தான் இப்புகை கேடா?
வாயில்லா ஜீவன்கள் மிருகங்களுக்கு கேடு ஒன்றும் இல்லையா?
குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கூட அதன் புகையை நம்மால் சுவாசிக்க முடிய வில்லை. பாவம் அந்த ஜீவன்கள். எறிந்துக் கொண்டிருக்கும் அருகிலேயே குப்பையை மேய்ந்துக் கொண்டிருக்கிறது.
நம் நாடு வல்லரசு ஆகப் போவுது என மார்த்தட்டிக் கொள்ளும் வேலையில்.
நாட்டு மக்களின் சுகாதார வாழ்வை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருப்பது குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதையாக இருக்கின்றன.
மாசுக் கட்டுப்பாடு வாரியம் இவ் விசயத்தில் சரியான தீர்வுக்கான வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்ப் பார்ப்பு.
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments