முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனம் அருகே சிறுத்தை வந்ததால் பரபரப்பு...!



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை  புலிகள் காப்பகத்தில் வாகன சவாரி சென்ற சுற்றுலா பயணிகளை கண்ட  சிறுத்தை ஒன்று வாகனத்தின் அருகே வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இருக்க கூடிய முக்கியமான சுற்றுலா தளமாக இந்த முதுமலை புலிகள் காப்பகம் இருக்கிறது. அதனால் தினம்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வாகன சவாரி மற்றும் யானை சவாரி ஆகியவை செய்யப்பட்டு வருகிறது வழக்கம். இந்த நிலையில் நேற்று வாகன சவாரியாக சென்ற சில சுற்றுலா பயணிகள் அங்குள்ள மணல் சாலையில் உள்ள மரத்தில் சிறுத்தை ஒன்று அமர்ந்திருப்பத்தை வாகன ஓட்டுநர் பார்த்து சுற்றுலா பயணிகளுக்கு காண்பித்திருக்கிறார். அதன்பிறகு சிறுத்தையை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு அந்த சிறுத்தையை கண்டு கூச்சலிட்டு புகைப்படம் எடுத்தனர்.
அதனை கண்டவுடன் அந்த சிறுத்தையானது மரத்திலிருந்து இறங்கி மரத்தின் அடியில் இருக்க கூடிய புற்களில் மறைந்து அமர்ந்து கொண்டது. மேலும் தொடர்ந்து சுற்றுலா பயணிகள்  அதே இடத்தில் வாகனத்தை நிறுத்திக்கொண்டு  சிறுத்தையை கண்டு கூச்சலிட்டதால் அந்த சிறுத்தை அங்கிருந்து எழுந்து வாகனத்தின் பின்புறமாக சென்று  முட்புதற்குள் ஓடி மறைந்தது. அப்போதைய சூழ்நிலையை பொறுத்தவரையில் புலிகளும் கிறுத்தைகளும் பெரும்பாலும் மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் வாழும் வன விளக்காகும். இந்நிலையில் வாகன சவாரி சென்றவர்கள்  இந்த சிறுத்தையை கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். இது கோடைக்காலம் என்பதனால் வனப்பகுதி வறண்டு இருப்பதாலும் சிறுத்தைகள் புலிகள் எளிதாக காணமுடியம் என்பதனால்தான் இதுபோன்ற சம்பவங்களை எளிதாக சுற்றுலா பயணிகளால் பார்த்துமுடிந்தது. 
HASHIM
STATEXPRESS
 statexpress256@gmail.com

Post a Comment

1 Comments

jasminOlivia said…
Very informative post. I really do hope for this stuff works!
சுற்றுலா செய்திகள்