அதிரையில் கலீஃபா உமர் பின் கத்தாப் சேவையகம் சார்பில்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொது மக்களுக்கு குளிர் மற்றும் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர் இலவசம்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொது மக்களுக்கு குளிர் மற்றும் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர் இலவசம்
அதிரை சேர்மன்வாடி, சாலையோரத்தில் கலிபா உமர் பின் கத்தாப்(ரலி) சேவை மையம் சார்பாக உணவு வங்கி திறந்து வைக்கப்பட்டது. அதிரையில் கலிபா உமர் பின் கத்தாப்(ரலி) சேவை மையம் கடந்தாண்டு துவங்கப்பட்டு ஆதரவற்றோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த சேவை மையம் மூலம் திருமணங்களின் போது மீதமாகவும் உணவுகளை உரிமையாளர்களின் அனுமதியோடு எடுத்து அதனை சரியான முறையில் பேக்கிங் செய்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர், குடும்பத்தாரால் கைவிடப்பட்டோர், உழைத்து உண்பதற்கு முடியாத நிலையில், வயிற்றுக்கு உணவுக்காக பலரிடமும் கையேந்தியும், பசியாற முடியாமல் இருப்பவர்களுக்கு இலவசமாக தேடிபோய் உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உணவு வங்கியை திறந்த இந்த அமைப்பினர் அதில் பழம், பிஸ்கெட், ரொட்டி, சாதம் என தேவையான உணவு வகைகள் பிரிட்ஜில் வைகத்தனர். தற்போது கோடை வெப்பத்தை தவிர்க்கும் வகையில் பொது மக்களுக்கு இந்த பிரிட்ஜில் குளிர் மற்றும் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை இலவசமாக வைத்துள்ளனர். இவர்களின் இந்த சேவையை அதிரை பிறை சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.
இடம்:
Cloud
Version
Chairman Vadi
அதிராம்பட்டினம்.
Chairman Vadi
அதிராம்பட்டினம்.
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
0 Comments