அதிரையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர் கைது..!

காஷ்மீரில் சிறுமி ஆசிபாவிற்க்கு நீதி கோரி இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று(15/04/2018) மாலை 4:30மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே ஆசிபாவிற்க்கு நீதி வழங்க கோரியும், சிறுமியை கற்பழித்து கொலை செய்த பயங்கரவாதிகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், இந்த ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய தமுமுக மாநில ஊடக பிரிவு துணை செயலாளர் மதுக்கூர் பவாஸ் காண், மதுக்கூர் ஜபுருல்லாஹ் ஆகியோர் இன்று அதிகாலை போலீசாரால் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மேலும் பல தமுமுக நிர்வாகிகளை போலீசார் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
     HASHIM
    STATEXPRESS
   statexpress256@gmail.com

Post a Comment

0 Comments