அதிரை இளைஞர் என்னும் இணையதளம், இளைஞர்களின் பார்வையில் ஒரு செய்தியை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும். ஒரு செய்தியை எவ்வாறு மக்களிடத்தில் தெரியப்படுத்த வேண்டும். என்னும் கருத்தில் கொண்டு ஒரு சிறிய முயற்சியாக இளைஞர்களால் துவங்கப்பட்டது தான் அதிரை இளைஞர் இணையதளம். இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பதால் அதிரை இளைஞர் என்று பெயர் வைத்தோம். அதன் பிறகு அல்லாஹ்வின் உதவியால் கடந்த 2 ஆண்டு காலமாக மக்களிடத்தில் உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பதும், மக்களிடத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரவும் மேலும் மார்க்க சம்பந்தப்பட்ட விஷயம் மக்களிடத்தில் அறிவை பெருகுவதற்கும் மார்க்க கேள்வி-பதில் போட்டி நடத்துவது இன்னும் ஏராளமான செயல்களை செய்து வருகிறோம். இந்நிலையில் இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். மேலும், மக்களின் ஆதரவை நாடி மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறோம், மேலும் நாங்கள் இன்னும் மென்மேலும் உயரத்தை தொடுவதற்கு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் எங்களுடைய இந்த முயற்சியை அல்லாஹ் பொருந்தி கொள்வானாக ஆமீன்!
0 Comments