அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மாணவர்களின் கோரிக்கை!


 கொரோனா பரவலின் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக நிகழ்நிலையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் திடிரென்று சுழற்சிமுறையில் வகுப்புகள் மாற்றப்பட்டு நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை  ஆனது பல்வேறு புதிய அறிவிப்புகளை பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளில் அறிவித்துக் கொண்டிருக்கிறது இந்நிலையில் நிகழ்நிலையின் மூலம் வகுப்பு எடுக்கப்பட்டிருந்தாலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வந்து நேரடி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. 

இந்நிலையில் மாணவர்கள் நிகழ்நிலையில் எடுக்கப்பட்ட எந்த பாடத்திலும் தெளிவின்மை காரணமாக இந்த அறிவிப்பினை பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை பல்வேறு வகையாக தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில்  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின் மூலம் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சிறந்த தீர்வை தருமாறு அனைத்து மாணவர்களின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments