நமதூர் அதிராம்பட்டினம், ஆலடிக்குளம் வடிகால் குளத்திலிருந்து வெளியேறும் வழி அடைப்பை இன்று (13-11-2021) காலை சரி செய்யப்பட்டு தண்ணீர் கல்வர்ட் வழியே வெளியேறிவிட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள்காரணமாக தண்ணீர் வடிகாலில் வழியே செல்லவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகரச்செயலாளர் மற்றும்ஆக்கிரமிப்பாளர்கள் உத்தரவிற்கிணங்க அலுவலர்கள் வேலை செய்ய அஞ்சுகின்றனர். நேற்று ஜும்மாதொழுதவுடன் பேருந்து மறியல் செய்ய முஹல்லாவாசிகள் சுமார் 250 பேர் வந்தனர். அவர்களிடம்செயல்அலுவலர் உறுதியளித்தபடி செயல்படவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் காட்டும்பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று மதியம் 3-30 மணியளவில் ஆலடிக்குளத்தில் அறவழிப்போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலடிக்குளம் வந்து அறவழிப்போராட்டத்திற்கு ஆதரவு தந்தனர். இப் போராட்டத்திற்கு பிறகு பேரூராட்சி ஊழியர்கள் தொடர்ந்து பணியைசிறப்பாக செய்து வருகின்றனர். இதனால் ஆலடிக் குளத்தின் நீர் யானையான் குலத்தின் வழியாகவெளியேற்றப்படுகிறது. இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பொது மக்களுக்கும்ஆலடித்தெரு வாசிகளின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments