அதிரை ஆலடித்தெரு வாசிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் பேரூராட்சி…


நேற்றைய தினம் 10-11-2021நமதூர் அதிராம்பட்டினம் புது ஆலடித் தெரு ஆலடி குளம் அருகாமையில் உள்ள பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில் குப்பை கழிவுகளை பல நாட்களாக கவனிக்காமல் குப்பை அதிகமாக நிறைந்து கிடக்கிறது என்றும் மேலும் ஆலடி குளத்தின் அருகாமையிலுள்ள மின்மாற்றி மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதையும் மற்றும் ஆலடி குளம் நிறைந்து உடைபடும்  தருவாயில் உள்ளதையும்
பேரூராட்சிக்கு வாட்ஸ்அப் குழுமத்தின் மூலம் தெரியப்படுத்தி இருந்தோம் இதனை சற்றும் செவி தாழ்த்தாது பேரூராட்சி இருப்பது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய செயலாக கருதப்படுகிறது.
இந்த மூன்று கோரிக்கைகளையும் விரைந்து சரி செய்யுமாறு பேரூராட்சிக்கு பொது மக்களின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது‌.

இப்படிக்கு.
அதிரைவாசிகள்.

Post a Comment

0 Comments