நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்



 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப நாம் என்னதான் கல்விசெல்வம் முதலியவற்றைப் பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும்உடல்நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானது எனக் கூறுவர்கல்விசெல்வத்தை மட்டும் சேர்த்து வைத்திருந்தால் போதாதுஅதற்கேற்ற உடல் நலமும் இருந்தால்தான் அவையனைத்தையும் அனுபவிக்க முடியும்.சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பதற்கொப்ப நலமான வாழ்க்கையைப் பெற்றிருந்தால்தான் நினைத்ததைச் சாதிக்க இயலும்நோயால் பீடிக்கப்பட்ட ஒருவரால் தான் சாதிக்க நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் போகிறதுஅதற்கேற்ற வலுவும் மனோதிடமும் அவர்களிடம் இல்லாததே இதற்குக் காரணமாகும்அவர் எவ்வளவுதான் செல்வந்தனாக இருந்தாலும் எவ்விதப் பயனுமில்லை.. ஏனென்றால்அந்நோயைக் குணப்படுத்துவதற்காகவே அதிகமான பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது’ என்பது போலச் சிரமப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமல் இவ்வாறு செலவிடுவது வருந்தத்தக்க ஒன்றாகும்.நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்குப் பல சிறந்த வழிகள் இருந்தாலும் சிலர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கவே செய்கின்றனர்இவர்கள் நகைஉடைசொத்துச் சேகரிப்பதிலேயே தங்களின் நேரத்தைச் செலவிடுகின்றனர்ஆனால்உடல் நலத்திற்கு வேண்டியதைத் தேர்வு செய்ய மறந்து விடுகின்றனர்உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்றால் அது மிகையாகாதுநமது உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளையும் சமசீராக உட்கொள்வது அவசியமாகும்அதுமட்டுமல்லாமல்அவ்வுணவைத் தகுந்த நேரத்தில்ஏற்ற அளவில் உட்கொள்வதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.நோயற்ற வாழ்க்கைக்கு உடற்பயிற்சியும் இன்றியமையாததாகும். ‘ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாடிய பாரதியார் உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் சுறுசுறுப்பாகவும் மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர, உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட உண்மையாகும்.



Post a Comment

0 Comments