அதிரை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவரின் உருக்கமான பேட்டி.!(வீடியோ இணைப்பு)

 


என் பெயர் இதிரிஸ் அகமது. நான் ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியர். அதிராம்பட்டினம், அம்பேத்கார் நகர், பட்டுக்கோட்டை சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.கடந்த 2003ல் அதிராம்பட்டினதில் உள்ள இமாம் ஷாஃபி என்ற தனியார் பள்ளியில் ஆங்கில மொழி பயிற்சி ஆசிரியராக பணியில் சேர்ந்து, பின்பு வணிகவியல் ஆசிரியராக பணிஉயர்வு பெற்று பணியாற்றி வந்தேன்.கடந்த 2019ல் ஆட்குறைப்பு என்ற பெயரில் மூத்த ஆசிரியர்கள் பலரை பணிநீக்கம் செய்து விட்டார்கள். ஒரு மாற்றுத்திறனாளி என்றும் கருதாமல் என்னையும் பணிநீக்கம் செய்து விட்டார்கள். இதனால் வாழ்வாதாரம் இழந்து, மாற்றுத்திறனாளியாக இருந்தும் என் சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்த நான் தற்போது என் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்காக பிறரிடம் கையேந்த நிலைக்கு வந்துவிட்டேன்.16 ஆண்டகள் ஒரே நிறுவனத்தில் வேலைசெய்து, திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதால் வேறு இடங்களில் பணி தர மறுத்துவிட்டனர்.இந்த சூழலில் குடும்பதின் அன்றாட செலவினங்கள் மற்றும் வீட்டு வாடகைக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளேன்.16 ஆண்டுகள் பணிபுரிந்த பள்ளியில் இருந்து கொடத்தொகை (Gratuity Fund) கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை அணுகியும் அதை ஏதாவது காரணம் சொல்லி தர மருக்கிறார்கள். மாற்றுத்திறனாளியான என்னை இரண்டு ஆண்டுகளாக அலைகளிக்கிறார்கள்.

(1) கடன் சுமையில் சிக்கிதவிக்கும் என்னை காப்பாற்ற, எனக்கு சேரவேண்டிய Gratuity Fund ஐ பெற்றுத்தருமறும், 

(2) வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் எனக்கு கருணை காட்டி ஒரு நிரந்தர பணியும் வழங்கிடுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.இதுவே என்னுடைய இறுதி முயற்சி. இதற்கு மேல் என் மனைவி மற்றும் குழந்தைகள் வருமணமின்றி அவதிபடுவதை தாங்கமுடியாமல் பெரும் மனஉலைச்சலில் வேறு வழி இன்றி தவித்து வருகிறேன்.

இப்படிக்கு 

ந. இதிரிஸ் அகமது.

9944186539



Post a Comment

0 Comments