குப்பைகள் அகற்றம் தொடக்கம்! Click
போர்க்கால அடிப்படையில் ஊரில் உள்ள அனைத்து இடங்களிலும் சிதறிக் கிடந்த குப்பைகளை அகற்றம் செய்து ப்பிலிசிங் பவுடர் போடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வார்டுக்கும் தனி தனிக் குழுவாக ஊழியர்களை நியமித்து
அனைத்து இடங்களுக்கும் வாகனத்தில் வலம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப நாட்களாக அதிகமான குப்பைகள் தெருக்களில் தேங்கி இருந்தது மேலும் தற்பொழுது மழைக் காலமாக இருப்பதால் நோய்கள் பரவக் கூடிய அபாயம் இருப்பதால்
உடனே சுத்தம் செய்ய வேண்டுமாய் வலைதளங்களில் பல்வேறு பதிவுகளும் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகவே போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் உள்ள மரக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நமது ஊரை மாஸ் கிளினிங் செய்து வருகிறார்கள்.
பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்வதுடன்
விரைவில் ஒவ்வொரு பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் வந்து குப்பைகளை வாங்குவதற்கு ஒவ்வொரு பகுதிக்கும் நபர்களை நியமிக்க உள்ளார்கள்.
நமது ஊரை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டுக் கொண்டு உள்ளார்கள்.
இன்று காலையில் CMP லைன் பகுதியில் உள்ள குப்பைகள் சம்பந்தமாக பதிவு வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது CMP லைன் மற்றும் புதுமனை தெருவில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு பவுடர் போட்டு உள்ளார்கள்.
நாளையும் தொடர்கிறது.
0 Comments