தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயங்க தற்காலிக தடை!!

              

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூலை 05-ம் தேதி வரை தொடரும் எனவும் அதன் பிறகு சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முன்பு இருந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments