அதிராம்பட்டினம் காதீர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பேரணி நடத்தினர். நாடெங்கும் பல்வேறு பகுதியில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்துகொண்டு வருகிறது.இதனை தொடர்ந்து அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தினர். அதிராம்பட்டினம் தெரு வழியாக பேரணி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களுடைய எதிர்ப்பை தெரிவித்தன.
0 Comments