குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பு: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வங்கியில் ஒரே நேரத்தில் பணம் எடுக்க குவிந்த மக்கள்!

காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணம் எடுக்க மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தில் பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வங்கியின் பேங்க் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது தேசிய மக்கள் பதிவேட்டில் வழங்கப்பட்ட கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் வாட்ஸ் அப்பில் பரவியதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மக்கள் தேசிய மக்கள் பதிவேடு குறிப்பிடப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறுவதற்காக ஒரே நேரத்தில் வங்கியில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் ப
ரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு வங்கி நிர்வாகம் சார்பில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்தால் போதும், தேசிய மக்கள் பதிவேடு தான் கட்டாயமாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர்

Post a Comment

0 Comments